2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம்

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், ஹஸ்பர் ஏ ஹலீம்

சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தல் தினத்தையொட்டி, சர்வதேச கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தின் முதல் நாளான இன்று ( 16) திருகோணமலை –மூதூர், தக்வா நகர் கடற்கரை சுத்தப்படுத்தல் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலில் நடைபெறும் இந்தக் கடற்கரை கடற்கரை சுத்தப்படுத்துதல் செயற்பாடு, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு, கிழக்கு மாகாண உதவி முகாமையாளர் ரி. ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நாள் நிகழ்வில், மூதூர் பிரதேச சபை, மூதூர் பிரதேச பாடசாலை மாணவர்கள்,  கடற்படையினர் இணைந்து, கடற்கரையை சுத்தப்படுத்தலில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .