2025 மே 14, புதன்கிழமை

கடையில் திருட்டு; இளைஞர்களுக்கு மறியல்

எப். முபாரக்   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, வான்எல பகுதியில் பலசரக்குக் கடையொன்றை உடைத்து, அதிலிருந்த பொருட்களைத் திருடிய கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 18, 21 வயதுடைய இளைஞர்கள் இருவரையும், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க  உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் இருவரும் இணைந்து, குறித்த கடையை உடைத்து, 10,000 ரூபாய் பெறுமதியான  அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் , 5,000 ரூபாய் பணம், பருப்பு, சீனி, மா மற்றும் டின்மீன்கள்  உள்ளிட்ட பொருட்களைத்  திருடியுள்ளதாக, கடை உரிமையாளரால், வான்எல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.               


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X