Suganthini Ratnam / 2016 நவம்பர் 22 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூரங்கல் கிராமத்தில் கர்;ப்பிணிப் பெண் ஒருவரை கழுத்து நெரித்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 18 வயதுடைய கணவரை எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் டி.சரவணராஜா, திங்கட்கிழமை (21) மாலை உத்தரவிட்டார்.
நளீம் ஜனுபா (வயது 15) என்பவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) அவர் வசித்துவந்த வீட்டுக் குளியல் அறையிலிருந்து மீட்கப்பட்டது. இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டமை தெரியவந்தது. இதனை அடுத்து, சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் கைதுசெய்யப்பட்டார்.
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025