Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற அடையாள அட்டைகளை, கணினி மயப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்ட்ட அடையாள அட்டையாக வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள ஊழியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய பிராந்திய சுகாதாரத் திணைக்களங்கள் காணப்படுகின்றன.
அதிலும் திருகோணமலை பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு, கையால் எழுதப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக, விசனம் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு பல மில்லியன் ரூபாய் நிதிகள் வழங்கும் தமது திணைக்களங்களில் சேவை மனப்பான்மையுடன் கடமையாற்றும் சேவையாளர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்குவதில் அசமந்த நிலையில் இருப்பதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் டிஜிட்டல் முறையில் கணினி வடிவமைக்கப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களமும் நவீன விதத்துக்கேற்ற மாதிரி ஊழியரகளின் மனதைக் கவரும் விதத்தில் தமது சேவைகளை வழங்க முன்வர வேண்டும்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் பேனையால் எழுதப்பட்ட நிலையில் வழங்கப்படுகின்ற அடையாள அட்டைகள் ஆறு மாதத்துக்கே பாவிக்க முடியும் எனவும் இனிவரும் காலங்களில் டிஜிடல் முறையில் வடிவமைக்கப்பட்ட அடையாள அட்டைகளை வழங்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸாரிடம் வினவிய போது,
ஊழியர்களின் கோரிக்கைகளை வரவேற்பதாகவும் நவீன காலத்தில் பேனையால் எழுதி வழங்குகின்ற அடையாள அட்டைகளைப் பாவிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இருந்தபோதிலும், எதிர்வரும் காலங்களில் நவீன மயப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago
4 hours ago
8 hours ago