Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
பொன் ஆனந்தம் / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
மியன்மாரில், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை தொடர்பான விசேட கண்டனத் தீர்மானம், கிழக்கு மாகாண சபையில், இன்று (07) நிறைவேற்றப்பட்டது.
மாகாண சபை அமர்வு, காலை 10.00 மணியளவில், தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலமையில் கூடியபோது, இதற்கான விஷேட பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை சமர்பித்தார்.
இதனை வழிமொழிந்து உறுப்பினர் ஆர்.அன்வர் உரையாற்றினார். இந்தத் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், விவாதமின்றி, பிரதமர், ஜனாபதி உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைப்பதாக தவிசாளர் சபையில் அறிவித்தார்.
மியன்மார் பிரதேசத்தில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனைத் தடுக்க ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்களுக்கு இத்தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் அனுப்ப வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago
13 May 2025