2025 மே 14, புதன்கிழமை

கத்திகளுடன் ஐவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜூலை 10 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மதவாச்சிப் பகுதியிலிருந்து கோமரங்கடவெலவுக்குப் பயணித்த  காரொன்றை வழிமறித்துச் சோதனை செய்தபோது கத்திகள், இரும்புக்கம்பி மற்றும் தடிகளுடன் 5 பேரை ஞாயிற்றுக்கிழமை (9) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

27 வயது முதல் 47 வயதுவரையானவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கார் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து, அக்காரை வழிமறித்துச் சோதனையிட்டதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களிடமிருந்து 5 கத்திகளையும் இரும்புக்கம்பியையும் பொல்லையும் கைப்பற்றியதாகவும் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .