2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

கத்திக்குத்து; ஒருவர் பலி

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூலை 30 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில்  கத்திக்குத்துக்கு இலக்காகி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர், நேற்று (29) காலை உயிரிழந்துள்ளாரெனப்  பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்துக்கு இலக்கானவர், தம்பலகாமம், புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை காளிராஷா (54 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரரும் உயிரிழந்தவரும் ஒன்றாக மது அருந்தியதாகவும் அவ்வேளை காணி  தொடர்பாக பேசிக்கொண்டிருந்த போது, வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் அதனையடுத்து, மனைவியின் சகோதரர், கத்தியால் குத்தியதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்தியப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தியால் குத்திய சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாகவும் கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும்  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X