2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கந்தளயாயில் கைகலப்பு: அறுவர் காயம்

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்

கந்தளாயில் இரண்டு மீனவக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பின்போது, 6 பேர் காயமடைந்த நிலையில் கந்தளாய்  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.   

கந்தளாய்க் குளத்தில் வீச்சு வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் அத்தாங்கு மீன்பிடி முறையைத் தடுத்து நிறுத்தியமையைக் கண்டித்து, கந்;தளாய், மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக ஒருபகுதி மீனவர்கள் இன்று  (22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தைக் குழப்பும் நோக்கில் மற்றுமொரு மீனவர்கள் ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்திருந்தனர்.
இந்த இரு மீனவக் குழுக்களுக்கு இடையிலேயே கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணையைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X