2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கரடியின் தாக்குதலில் பெண் ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 26 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, கல்யாணபுரப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கரடியின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பகுதியைச் சேர்ந்த 06 பிள்ளைகளின் தாயான எஸ்.பிஸோமெனிகே (வயது 52) கரடியின் தாக்குதலுக்கு உள்ளானார்.
காட்டுப்பகுதிக்கு விறகு எடுக்கச்சென்ற இவர், அங்குள்ள மரம் ஒன்றில் தேன்கூடு இருந்ததை அவதானித்துள்ளார். அத்தேன்கூட்டை இவர் பார்வையிடுவதற்குச் சென்றபோது, கரடி ஒன்று பாய்ந்து வந்து இவரைத் தாக்கியுள்ளது.

இவர் உடனடியாக மஹதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .