2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கரடிகளின் தாக்குதலாலல் படுகாயம்

தீஷான் அஹமட்   / 2018 ஜூலை 30 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர், கிழக்கு நீனாக்கேணிக் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் மகேந்திரன் கடந்த வியாழக்கி​ழமை (26) அன்று கன்னியா வனப்பகுதியில் தேன் சேகரிக்கும் போது இரண்டு கரடிகளின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில், தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.

கரடியின் தாக்குதலுக்குள்ளான இவரை திருகோணமலை ஆதார வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் ஓரளவு உடல் நிலை தேறி இன்று (30) வீடு திரும்பியுள்ளார்.

இவர், பாடசாலை செல்லும் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன், மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X