2025 மே 14, புதன்கிழமை

கரடியின் தாக்குதலில் தாயும் மகளும் படுகாயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 04 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மயிலவெவப் பகுதியில் காட்டுக்குள் விறகு எடுக்கச்சென்ற தாயும் மகளும் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (04) அனுமதிக்கப்பட்டுள்ளனரென வைத்தியசாலைத் தகவல் தெரிவிக்கின்றது.

 

இவ்வாறு கரடித்தாக்குதலுக்குள்ளானவர்கள், அதே இடத்தைச் சேர்ந்த எச்.பிசோ மெனிகா (42 வயது) மற்றும் அவரது மகளான  எஸ்.சுனேத்ரா (28 வயது) எனத் தெரியவருகின்றது.

குறித்த இருவரும், அவர்களது வீட்டுக்குப் பின்னாலுள்ள காட்டுக்குள் விறகு எடுப்பதற்காகச் சென்று, வீழ்ந்து கிடந்த மரமொன்றை வெட்டிய போது, அம்மரத்துக்கருகில் உறங்கிக்கொண்டிருந்த கரடி, மெனிகாவைத் தாக்கியள்ளது.

இதனையடுத்து, அவரது மகள் கரடியைக் கோடாரியால் தாக்கியுள்ளார். அதேவேளை, கரடி மீண்டும் மகளைத் தாக்கியதாக, பாதிக்கப்பட்ட மகளான எஸ்.சுனேத்ரா, வைத்தியரிடம் தெரிவித்துள்ளார்.

கரடி தாக்குதலுக்குள்ளான தாயும் மகளும், கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே, மேலதிக சிகிச்சைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X