Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
மனிதனை வாழ வைக்கும் கரையோரங்களையும் மரங்களையும் பாதுகாப்பதற்கு, உள்ளூராட்சிமன்றங்களும் பிரதேச செயலகங்களும் விசேட செயற்றிட்டங்களை உருவாக்கி, அவற்றை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, கிண்ணியா நகரசபையின் உறுப்பினர் எம்.எம்.மஹ்தி வலியுறுத்தியுள்ளார்.
கிண்ணியா நகரசபையின் 19ஆவது அமர்வு நேற்று (19) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், உலகமயமாக்கலாலும் நகரமயமாக்கத்தினாலும் இயற்கை வளங்களான கரையோரங்களும் தாவரங்களும் தொடர்ந்தும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் இதன் காரணமாக சூழல் மாசடைவதோடு புவி வெப்பமடைதல், மழை குறைதல், வரட்சி, துருவப் பிரதேசங்களில் காணப்படும் பனிப் பாறைகள் உருகுதல், கடலின நீர்மட்டம் உயர்தல், கடலரிப்பு, மண்சரிவு, இயற்கை அனர்த்தங்கள், உயிரினங்கள் அழிதல் போன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.
“நாம் எமது எதிர்கால சந்ததியினருக்கு வளமான, பாதுகாப்பான, நாட்டையும் சூழலையும் திட்டமிட்டு உருவாக்கிக்கொடுக்க வேண்டிய பொறுப்பை சுமந்திருக்கிறோம். எனவே பலன்தரக் கூடியதும் பாதுகாப்பை தரக்கூடியதுமான மரங்களை நடுவதோடு கரையோரங்களில் கண்டல் தாவரங்களையும் நட்டி அவற்றைப் பாதுகாப்பதோடு நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
38 minute ago
51 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
51 minute ago
56 minute ago