2025 மே 19, திங்கட்கிழமை

கல்வி அமைச்சர், திருகோணமலை விஜயம்

Thipaan   / 2016 ஜூலை 23 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கல்வி அமைச்சர் அகிலவராஜ் காரியவசம், எதிர்வரும் வியாழக்கிழமை (28) திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என கிண்ணியா வலயக் கல்வி அலுவலக திட்டமிடல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் கலிவிப் பணிப்பாளர் எம்.சி.நசார்  தெரிவித்தார்.

அன்றைய தினம் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை சிறாச் மகா வித்தியாலயம், முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி, கிண்ணியா அல் இர்பான் மகா வித்தியாலயம், வான்எல புஹாரி வித்தியாலயம் ஆகியற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

இந்த வைபவங்களில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்,ரீ.எம்.நிசாம், ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ உட்பட  நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் தொரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X