2025 ஜூலை 23, புதன்கிழமை

கலந்துரையாடல்

Niroshini   / 2016 டிசெம்பர் 31 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கான நிலையத்தினால் தேர்தல் பிரசார நிதியை வரையறுத்தல் மற்றும் சொத்துக்கள் பிரகடனம் தொடர்பான கலந்துரையாடல், இன்று (31) திருகோணமலை ஜெகப் ஹோட்டலில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில்  சமூக சேவைகளில் அக்கறை கொண்ட கிராம மட்டத்தில் செயற்பட்டு வருகின்ற சங்கங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்து தேர்தல் தொடர்பில் சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புச்சட்டம், சொத்துக்கள் மற்றும் கடன்கள் வௌியீட்டு பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமை, சொத்து மற்றும் கடன் வௌியீடு தொடர்பான சட்டத்தில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் தௌிவூட்டப்பட்டன.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சஜித் வெல்கம, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி, டிரான் பேரன்சி இன்டனெஸனல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் ஷான் விஜயதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .