2025 மே 19, திங்கட்கிழமை

கலந்தாலோசனை செயலணியின் வலய மட்ட அமர்வு

Thipaan   / 2016 ஜூலை 31 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணியின் திருகோணமலை பிராந்திய வலய மட்ட அமர்வு, கிண்ணியா பொது நூலக மண்டபத்தில், நேற்றுச் சனிக்கிழமை (30) இடம்பெற்றது.

இதில், யுத்தத்தினால் நேரடிப் பாதிப்புக்குள்ளானோர், காணாமற்போனோர் குடும்பத்தினர், காணி மீள்குடியேற்றம் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

அத்துடன், கடந்த காலத்தில்  யுத்தத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பொறிமுறைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக புள்ளி விவரங்கள், ஆதாரங்களுடன் தெளிவாக முன்வைக்கப் பட்டன.

எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் கூறப்பட்டது.

இந்த நிகழ்வில் திருகோணமலை,  மூதூர்,  கிண்ணியா போன்ற பிரதேசங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X