Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 22 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல்.நௌபர்
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூரில், கலாசார மண்டபமொன்றை அமைத்துத்தருமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு, 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள், தோப்பூர், அதையண்டிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் இங்கு, கலாசார மண்டபமொன்று இன்மையால், இப்பகுதி மக்கள், கலைவிழாக்கள், பொது நிகழ்வுகள், ஒன்று கூடல்கள் ஆகியவற்றை நடத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மண்டப வசதி இன்மை காரணமாக, பாடசாலை மண்டபங்களையும் பொதுக்கட்டடங்களையும் தேடி அலையவேண்டியுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோப்பூரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மணி மண்டபமெனும் பெயரிலான கலாசார மண்டபம் அழிந்து 30 வருடமாகியும் மீள நிர்மாணிக்கப்படவில்லை என்றும் எனவே, கலாசார மண்டபமொன்றை அமைத்துத் தருமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
32 minute ago