2025 ஜூலை 28, திங்கட்கிழமை

களப்புக் கடலில் ஆயுதங்கள் மீட்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னைமரவாடி பகுதியிலுள்ள களப்புக் கடலில் நேற்று சனிக்கிழமை (03), பொலிஸாரின் உதவியுடன் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடற்பரப்புக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 2 தடவையும் இம்மாதம் 1ஆம் திகதி ஒரு தடவையும் ஆயுதங்கள் சிக்குண்டன.

இவ்வாறு மீனவர்களின் வலையில் தொடர்ந்து ஆயுதங்கள் சிக்குவதால், கடற்படையின் மேற்கொண்ட தேடுதலின் போது, ரி-56 துப்பாக்கி, கைக்குண்டுகள் 2 மற்றும் துப்பாக்கி ரவைகள் 535, புகைக் குண்டு 1, துப்பாக்கி பாகங்கள் போன்றவை மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸாஸ் தெரிவித்தனர்

மேலும் குறித்த கடற்பரப்பில் தொடர்ந்து தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .