2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம், அ.அச்சுதன், ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாணப் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள், இன்று (18) ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால்  கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டராசிரியர்களாகக் கடமை புரிந்து நியமனம் கிடைக்கப்  பெறாதவர்கள் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

2018ஆம் ஆண்டு நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தும் கிடைக்கப்பெறவில்லை எனவும் கிழக்கு மாகாணத்தில் 262 தொண்டர் ஆசிரியர்கள்  இருப்பதாகவும் அவர்களுக்குரிய  நிரந்தர நியமனத்தை தேர்தலுக்கு முன்னர் வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .