2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கவனிப்பார் அற்றுக் கிடக்கும் சுகாதார நிலையம்

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கற்குழியில், 04 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கவனிப்பார் அற்று, காடு மண்டியிட்டுக் காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பயன்பாடற்ற விதத்தில் அரச கட்டடம் காணப்படுவதால் இதற்குள் சமூகவிரோத செயல்கள் இடம்பெறலாம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் குடியிருப்பு முதல் ஏனைய அரச தேவைகளுக்காக கட்டடங்களுக்கான பற்றாக்குறை நிலவும் நிலையில், மேற்படிக் கட்டடம் இவ்வாறு காட்சியளிப்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு, மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனவே, இதனைப் புதுப்பித்து, மக்கள் பயனடைய வழியேற்படுத்துமாறும், பிரதேச மக்கள் கோருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X