2025 மே 14, புதன்கிழமை

காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஜூலை 14 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியமாங்கேணி பகுதியைச் சேர்ந்த வயோதிபரொருவர் யானைத்தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக்குப் பின் புறமாகவுள்ள தோட்டப் பயிர்ச்செய்கைக்குக் காவலுக்குச் சென்ற போது, யானை தாக்கி படுகாயமடைந்த அவர், நேற்றிரவு (13) 9.45மணியளவில் உயிரிழந்துள்ளார்.

சேருநுவர, அரியமாங்கேணி பகுதியைச் சேர்ந்த எஸ்.வேலாயுதம் (70 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம், மூதூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .