எப். முபாரக் / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - அக்போபுர பகுதியில் காணாமல்போன நபர், நேற்று (23) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான, 75 வயதுடைய எம்.ஹப்புஹாமி என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (21) காலை முதல் காணாமல் போன இவர், தல்கஸ்வெவ குளத்தில் சடலமாக மிதந்ததைக் கண்ட பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து, சடலம் இனங்காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர், இருதய நோயாளியென்றும் இவர் காணமல் போன தினத்திலிருந்து பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அக்போபுர பொலிஸார், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .