2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

காணாமல்போனோர் அலுவலகத்துக்கு எதிராகப் போராட்டம்

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார்,

பொன்ஆனந்தம், ஒலுமுதீன் கியாஸ்

காணாமல்போனோர் அலுவலகத்தின் வாக்குமூலங்களைப் பெறுவதற்கான சந்திப்பு, திருகோணமலை மாவட்டத்தில் இன்று (13) நடைபெற்றது.

காணாமல்போனோர் அலுவலகம், வட, கிழக்கு பகுதிகளில் யுத்த காலத்தில் காணாமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் தனது ஆரம்ப சந்திப்புகளை, கடந்த மே மாதம் ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குமூலங்களுக்கு இதுவரையிலும் சிறந்த தீர்வு கிடைக்காத பட்சத்தில் இன்று இடம்பெற்று வருகின்ற வாக்குமூலமும் போலியானது எனவும் இதனை தாங்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் சிலர், மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் போனோர் தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கூட்டம், திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் நடைபெறவிருந்த நிலையில், திருகோணமலை - கண்டி பிரதான வீதியிலுள்ள இந்துக் கலாசார மண்டபத்துக்கு முன்னால் பதாதைகளை ஏந்தியவாறு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, காணாமல் போனோர் அலுவலக வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளும் முகமாக, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தைச் சூழவுள்ள பிரசேத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X