2025 மே 14, புதன்கிழமை

காணி அலுவலர்களுக்கான இடமாற்றம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தைச் சேர்ந்த அலுவலர்கள், 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் கோரி, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியுமென, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.டீ.அனுரதர்மதாச தெரிவித்தார்.

குடியேற்ற அலுவலர்கள், காணி வெளிக்களப் போதனாசிரியர்கள் ஆகியோர்  இதற்காக விண்ணப்பிக்க முடியும்

தொடர்ச்சியா ஒரு பிரதேச செயலக சேவை நிலையங்களில் 5 வருடம் சேவை செய்தோர், கட்டாயம் இடமாற்றம் கோரி விண்ணப்பிக்க வேண்டும். 5 ஆண்டுகளை விட குறைந்த காலத்தில் பணியாற்றுவோர்  விண்ணப்பம் செய்தால், இது தொடர்பில் இடமாற்ற சபை தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள  மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தைச் சார்ந்தோர் வேறொரு மாவட்டத்தில் கட்டாயம் கடமையாற்றவேண்டுமென்ற அடிப்படையில் இடமாற்றங்கள் இடம்பெறும்.

இடமாற்ற சபையின்  இறுதி முடிவு, ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி அறிவிக்கப்படும்.

இது தொடர்பான மேன் முறையீடுகளை அலுவலர்கள் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி வரை சமர்பிக்க முடியும்.

அத்துடன்,  மேன் முறையீட்டு சபையின் தீர்மானம் நவம்பர் 2 ஆம் திகதி அறிவிக்கப்படும். அலுவலர்களின் இடமாற்றங்கள் யாவும் 01.01.2018 முதல் அமுலாகுமெனவும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.டீ. அனுர தர்மதாச மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X