Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
தீஷான் அஹமட் / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாம் 40 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வருவதோடு, பயிர்செய்கையும் மேற்கொண்டு, வாழ்வாதாரத்தைக் கொண்டுசென்ற காணி தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டைத் தீர்த்து வைக்குமாறு, திருகோணமலை, சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், நீணாக்கேணி பகுதியிலுள்ள காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நேற்று (24), சேனைப் பயிர் செய்வதற்காக தமது காணிகளை உழவு இயந்திரத்தைக் கொண்டு உழுது கொண்டிருக்கும் போது, சேருநுவர பொலிஸார் அவ்விடங்களுக்கு வருகை தந்து பயிர் செய்கையில் ஈடுபட வேண்டாம் எனத் தடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த காணி, தொல்பொருள் திணைக்களத்துக்குரிய காணியென தமது வேலைகளைத் தடுத்து நிறுத்தியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, நீணாக்கேணி கிராம மக்கள் குடியிருக்கின்ற காணிகளில் அதிகமானவை வில்கம் விகாரைக்குரிய 49 ஏக்கர் காணிக்குள் உள்ளடக்கப்படுவதாக, வில்கம் விகாரையின் விகாராதிபதி சேருநுவர பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கமைவாகவே, இவ்வாறு தமது பயிர்செய்கை வேலைகள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தாம் பல வருடங்களாக மின்சாரம் பெற்று வீடுகளை அமைத்து குடியிருந்து வருவதாகவும் அவர்கள் தெரிவிப்பதோடு, இந்த பிரச்சனை நீண்டு செல்லாது இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago
5 hours ago
8 hours ago