Editorial / 2018 மார்ச் 26 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா, தம்பலகாமம் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டமையால், படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது இளைஞனும், சிகிச்சை பலனின்றி, நேற்று (25) மாலை உயிரிழந்துள்ளார்.
மூதூர், நடுத்தவு பகுதியைச் சேர்ந்த எம்.சம்ரீன் எனும் இளைஞனே உயிரிழந்தவராவார்.
கிண்ணியா - தம்பலகாமம் பிரதான வீதி, காளி பாஞ்சான் 'சிவப்பு பாலம்' அருகாமையில் கடந்த 19ஆம் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மூதூரைச் சேர்ந்த தௌபீக்- உமைசுல் கர்னி (வயது 23) எனும் இளைஞன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேவேளை, மேற்படி இளைஞன், பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
7 minute ago
25 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
43 minute ago
1 hours ago