2025 மே 14, புதன்கிழமை

கால்நடை வளர்ப்புக்கு மானியம் வழங்க நடவடிக்கை

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 16 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய நல்லிணக்க மற்றும் நல்லிணக்கத்துக்கான பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்துக்கு அமைவாக, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் கால் நடைவளர்புகான வாழ்வாதார உதவித்திட்டத்துக்கென 15 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளதாக, நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்தார்.

 

“இந்நிதி மூலம், 100 குடும்பங்களுக்கு தலா 150, 000  ரூபாய் பெறுமதியான கால்நடை வளர்புக்கான வாழ்வாதார  மானியம் உதவித்தொகை  பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

“ஆடு, மாடு ஆகிய காநடைகளை வளர்ப்பதற்கே இவ்மானிய உதவி வழங்கப்படவுள்ளதுடன், பயனாளிகள் தெரிவும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

“விரைவில் இவர்களுக்கான வாழ்வாதார உதவியைக் கையளிக்க சகல நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டும்” என, அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப்பயனாளிகளை பிரதேச செயலகத்துக்கு அழைத்து, இவ்வாழ்வாதார உதவிகளை பயன்படுத்தவேண்டிய வழிமுறைகுறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X