Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ. ஹலீம்
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் டீ சந்தியில் உள்ள வீதியோரப் புடவைக் கடையொன்றுக்கு, மறு அறிவித்தல்வரை, இன்று (09) சீல் வைக்கப்பட்டது.
குறித்த வியாபார நிலையத்தில், வெளி மாவட்டத்தவர்கள் கடமை புரிவதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, நேற்று (09) குறித்த வியாபார நிலையத்துக்கு, கிண்ணியா நகரசபைத் தவிசாளர் தலைமையிலான பொலிஸார் குழு சென்றிருந்தனர்.
உரிய வியாபார நிலையத்தில் வெளி மாவட்டத்தார் இருப்பதை உறுதிப்படுத்தியதன் பின்னர், மறு அறிவித்தல் வரை கடைக்கு சீல் வைத்தனர்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள், கிண்ணியாவுக்குள் வருகை தந்தால், உடன் தனக்கு அறியத்தருமாறு, தவிசாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025