2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் மூவர் கைது

Editorial   / 2018 ஜூன் 30 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பிரதேசத்தில், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட மூவரை, திருகோணமலை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று  (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மாகாமாறு பகுதியில், நிபந்தனையை  மீறி மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் வாகன சாரதிகள் இருவர், இன்று  (30) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு லீற்றர்  வடிசாராயம்   வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர்,  இன்று (30)  குட்டிக் கராஜ் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கிண்ணியா, றஹ்மானியா நகரைச் சேர்ந்த 66 வயதான கலந்தர் லெப்பை சேகு முகம்மது என்பவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மூவரையும்  கிண்ணியா பொலிஸாரிடம்  ஒப்படைத்திருப்பதாக, திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X