Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 செப்டெம்பர் 16 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியாப் பிரதேசத்துக்கு தனியான மேற்ச்சல் தரை வேண்டும் என்ற கோரிக்கை புத்திஜீவிகளால் வலுப்பெற்றுள்ளது.
கிண்ணியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கால்நடை வளர்ப்பில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். கால்நடை பராமரிப்பு பால் சேகரிப்பு, தயிர் உற்பத்தி, மாடு விற்பனை, மார்க்கட் நடத்துனர், இறைச்சி விற்பனை போன்ற கால்நடையோடு சம்பந்தப்பட்ட நேரடியல்லாத தொழில்களில் இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
கிண்ணியா பிரதேசத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கால்நடை பொருளாதாரத்தை நம்பியுள்ளனர்.
கடந்த சில வருடங்கள் வரை கோடை காலத்தில் கிண்ணியாவில் மாறி, கந்தளாய், கன்னியா, மொரவெவ போன்ற பகுதிகளிலும் மாடுகள் பராமரிக்கப்பட்டன.
ஆனாலும் அப்பகுதி சிங்கள மக்கள் தமது பகுதிக்கு கிண்ணியா மாடுகள் வரக் கூடாதென எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனால் கிண்ணியாவிலுள்ள மாடுகளை மேய்த்துக்கொள்வதற்காக கிண்ணியாவில் மேய்ச்சல் தரை வழங்கப் பட வேண்டும் என்ற அடிப்படையில் நீண்ட காலமாக பெயர் குறிப்பிடப்பட்ட பகுதிகள் பெரும்பாலானோரின் ஒப்புதலுடன் மேய்ச்சல் தரைப் பகுதி என அடையாளம் காணப்பட்டது.
இந்த மேய்ச்சல் தரை விவகாரம் தற்போது மீண்டும் சிக்கலாகியுள்ளது.
கிண்ணியாவின் மிக முக்கிய பொருளாதாரம் என்ற வகையிலும் மேய்ச்சல் தரை மிக முக்கியம் என கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் என்ற வகையில், இறைச்சி கிண்ணியா மக்களின் முக்கிய உணவு என்ற வகையில் உடனடித் தீர்வு காணப்பட வேண்டுமென, புத்திஜீவிகள் கோருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
49 minute ago
04 Jul 2025