2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு

Editorial   / 2022 ஜனவரி 20 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று, திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (19)  இடம்பெற்றது.

மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கையின் கல்விக்காக, மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளின் அளவை அதிகரிப்பது தொடர்பாக ஆளுநர் இதன்போது எடுத்துரைத்தார்.

மேலும், கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் நடப்பு விவகாரம் உள்ளிட்ட விடயங்களும் பேசப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X