2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

கிழக்கு ஆளுநர் தலைமையில் உதவி

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிழக்கு மாகாண ஆளுநரின்  கள விஜயத்தின்போது இனங்காணப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட ஐந்து பயனாளிகளுக்கு வீடு அமைப்பதற்காக முதற்கட்ட காசோலைகள் வழங்கி  வைக்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நேற்று (12) மாலை  நடைபெற்றது.

பயனாளி ஒருவருக்கு முதல் கட்ட கொடுப்பனவாக தலா ஒரு இலட்சம் ரூபாய்  என்ற அடிப்படையில், ஐவருக்கும்  இந்த காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஐவருக்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் பயனாளிகள் வலது குறைந்தோர்,வீடற்றோர் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வேளை, இத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் காலங்களில் 486 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன. இதற்கு வீடமைப்பு அதிகார சபையினால் 152 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண  வீடமைப்பு அதிகார சபையின் தலைவர்  ஜே. ஜெனார்த்தனன், வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர். நெடுமாறன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X