2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 21 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்,ஏ.எம்.ஏ.பரீத்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம்; வழங்குவதற்காக>  தனியான அமைச்சரவைப் பத்திரமொன்றைச்  சமர்ப்பிப்பதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்  உடன்பட்டுள்ளார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்

கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதுடன் தொடர்பான கலந்துரையாடல்> கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கல்வி அமைச்சர்> எம்.எஸ்.தௌபீக் எம்.பி, கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் 445 தொண்டர் ஆசிரியர்கள் உள்ளனர்.

வடக்கு> கிழக்கு மாகாணங்களிலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் ஏற்கெனவே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்பத்திர அனுமதியின் பிரகாரம் கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்கள் பாதிப்படையும் நிலைமை காணப்பட்டது. 

இதன் காரணமாக கல்வி அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் இதன்போது, கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் பெறக்கூடிய அளவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே  உள்ள அமைச்சரவைப் பத்திரத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்து> கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X