Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 11 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நல்லிணக்கம் மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களைக் கவனத்திற்கொண்டு, கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை என, அம்மாகண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநர் ரோஹித போகொல்லாகம, திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமையை இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் தான் தெளிவாகத் தெரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கல்வியில் பின்னடைவு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்கள் இம்மாகாணத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன எனவும் கூறினார்.
இணக்கமான, நட்புணர்வு ரீதியில்; செயற்பட்டு கிழக்கு மாகாணத்தையும் நாட்டையும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்வது இன்றியமையாத காலத்தின் தேவையாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
51 minute ago