Yuganthini / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம்
குச்சவெளி பிரதேசத்தில் நேற்று (11) இரவு 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெண்ணொருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டனரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி, ஜாயா நகர் பகுதியில் தேடுதலை மேற்கொண்ட போது, 29 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், 23 கிராம் கேரளக் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டார்.
அத்துடன், குச்சவெளி, சாகரபுர பகுதியில் மேற்கொண்ட தேடுதலில், 53 வயதுடைய ஒருவர், 3 லீற்றர் கசிப்புடன் கைதுசெய்யப்பட்டார்.
மேலும், குச்சவெளி, சாகரபுரம் பகுதியில் வைத்து 6 லீற்றரும் 750 மில்லி லீற்றர் கோடா வைத்திருந்த 35 வயதான குடும்பப் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டார்.
தங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இச்சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. விஜயசிங்க தெரிவித்தார்.
சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .