2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

குடும்பஸ்தர்கள் இருவர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.கீத்

கிண்ணியா பொலிஸ் பிரிவுப் பகுதியில்  வீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஒருவரும் கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவருமாக குடும்பஸ்தர்கள் இருவர், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா , உப்பாறு மைலப்பன் சேனை பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த அப்பகுதியைச் சேர்ந்த  (வயது -52 ) குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

இவரிடமிருந்து 3' அடி 2" அங்குலம், உயரமுடைய  கஞ்சா செடி, பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அதனையடுத்து,  கிண்ணியாத் துறையடி பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த   கிண்ணியா குறிஞ்சாக் கேணி நண்டுக்குடா பகுயைச் சேர்ந்த  (வயது- 51) குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து 1870 மில்லிக் கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பிராந்திய  போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஏற்கெனவே மூன்று தடவை கேரளா கஞ்சா வைத்திருந்து நீதிமன்றத்தில் தண்டனை அனுபவித்துள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்கள் இருவரையும்  இவரிடமிருந்து  கைப்பற்றப்பட்ட கஞ்சா செடி, கேரளா கஞ்சா ஆகியன, கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .