2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

குப்பைகளைத் தரம்பிரிக்கும் திட்டம் ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

குப்பைகளைத் தரம் பிரித்து, நகரசபை வாகனத்துக்கு ஒப்படைக்கும்  செயற்றிட்டம் ஒன்றை மீண்டும் திருகோணமலை நகரசபை நடைமுறைப்படத்தவுள்ளதாக, அதன் தலைவர் நா.ராஜநாயகம், இன்று (11) தெரிவித்தார்.

குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு ஒப்படைக்கப்படாவிடின், இம்மாதம் 15ஆம் திகதி முதல்  நகராட்சிமன்ற சுகாதார ஊழியர்களால் அவை பொறுப்பேற்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விவரிக்கையில், திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை இம்மாதம் 15ஆம் திகதி தொடக்கம் சேதன குப்பைகள், கண்ணாடிப் பொருள்கள், பிளாஸ்டிப் பொருள்கள் என்பவற்றை வேறாகவும் தங்கள் வீடுகளிலேயே தரம் பிரித்து குப்பை சேகரிக்க வரும் நகரசபை சுகாதார ஊழியர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.

பிளாஸ்டிக், கண்ணாடி பொருள்களை சேகரிப்பதற்கு தனியான வாகனமொன்று வாரத்தில் ஒரு நாள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும்  சேதனக் குப்பைகள் வழமை போல் வாரத்தில் இரு தடவைகள் சேகரிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும், அவர் கேட்டுக்கொண்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X