2025 மே 06, செவ்வாய்க்கிழமை

குறிஞ்சாக்கேணி வைத்திய அதிகாரி அலுவலகக் கலந்துரையாடல்

Editorial   / 2018 ஜூன் 30 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா பிரதேசத்தில்  குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை ஸ்தாபித்து நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவைகளை தீர்த்துவைப்பதற்கான கலந்துரையாடல்,  மாகாண சுகாதார பணிமனையில், நேற்று  (29) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர், முருகானந்தன், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர், கயல்விழி, திட்டமிடல் பணிப்பாளர் டொக்டர் பிரேம், டொக்டர். லதாகரன், டொக்டர், அருள் குமரன், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி  டொக்டர் ஏ.எம்.றிஸ்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வேண்டுகோளுக்கிணங்க, இக்கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X