Editorial / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்
குளத்தின் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, குளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, திருகோணமலை மாவட்டச் செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தையே தமது வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் தமது விவசாயத்துக்குத் தேவையான நீரை குளங்களின் மூலமே பெறுகின்றனர்.
“எனினும், பல குளங்கள் தூர்வாரப்படவேண்டிய நிலையில் உள்ளதோடு, மேன்கமம் குளம், பெருவெளி குளம், கங்குவேலி குளம் போன்றன, ஒரு சிலரால் சட்ட விரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு, அணைக்கட்டுகள் சேதமாக்கப்பட்டு, நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“தற்போது கங்குவேலி குளம், பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வேலைகள் நிறைவடையும் தருவாயில், சிலர், அக்குளத்தின் பகுதிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, குளத்தின் பகுதிக்குள் விவசாயத்தை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும்” என்றார்.
6 minute ago
9 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago