2025 மே 14, புதன்கிழமை

குளவிக் கொட்டு; சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலையில்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 16 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மஹதிவுல்வெவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இன்று (16) அனுமதிக்கப்பட்டுள்ளாரென, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர், அதே இடத்தைச் சேர்ந்த கே.பீ.காமினி (46 வயது) எனத் தெரியவருகின்றது.

இன்றையதினம், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான ஹோட்டலொன்றுக்கு விறகு வெட்டவதற்காகக் காட்டுப் பகுதிக்கு சென்ற வேளை, மரமொன்றில் குளவிக் கூடு இருந்ததை அவதானிக்காமல் வீழ்ந்து கிடந்த அம்மரத்தை வெட்டிய போது, குளவிக்கூடு களைந்து தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர், மேலதிக சிகிச்சைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு தற்பொது மாற்றப்பட்டுள்ளாரென, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X