Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஜூலை 08 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மஹதிவுல்வெவ பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர், இன்று (08) காலை 11 மணியளவில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பீ.பீ.ஜி.பேமாவதி (70 வயது) அவரது மகனான எஸ். காமினி (43 வயது) மற்றும் மகனது மனைவியான நிரோஷா வசந்தி (42 வயது) என்பவர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
வீட்டிற்கு மேல் பொருத்தப்பட்டிருந்த நீர்த்தாங்கியைச் சுத்தப்படுத்திய போது அருகிலிருந்த குளவிக் கூடு களைந்ததால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குளவிக் கொட்டுக்கு இலக்கான கணவன் – மனைவி, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், 70 வயதுடைய தாயாரை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக, வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
34 minute ago
57 minute ago