Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 21 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை – கந்தளாய் பகுதியில், ஊடக நிறுவனமொன்றால் நடத்தப்பட்ட பாட்டுக்கச்சேரி நிகழ்வின்போது, ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், இன்று (21) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இரத்தினபுரி, ஓப்பனாயக்க, அகறல்ல, படதுர பகுதியைச் சேர்ந்த ஜெயசிங்ஹ லால் குமார (31 வயது) என்பவரே, இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர், மெதிரிகிரிய மஹாவலி திட்டத்தில் வேலைசெய்யும் இளைஞர்களுடன், கந்தளாய் பகுதிக்கு ஊடக நிறுவனமொன்றால் நடாத்தப்பட்ட பாட்டுக்கச்சேரியைப் பார்ப்பதற்காக வருகை தந்ததாகவும், இதன்போது, இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .