எப். முபாரக் / 2018 ஜூன் 12 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் இரு குழுக்களுடையில் நேற்று (11) ஏற்பட்ட மோதலில் மூவர் காயங்களுடன், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயங்களுக்குள்ளான மூவரும் உவர்மலை, பாழையூற்று பகுதியை சேர்ந்த 24,25, 22 வயதுடையவர்கள் எனவும் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 25, 27 வயதுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் விவகாரம் தொடர்பிலான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .