Editorial / 2017 செப்டெம்பர் 23 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில் சூரங்கல் பகுதியில் கேரள கஞ்சா வியாபாரி ஒருவர், நேற்றிரவு (22) கைதுசெய்யப்பட்டுள்ளாரென, திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து, கேரளா கஞ்சா போதைப்பொருள் 6 கிராம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸ் குழுவினர், கிண்ணியா சூரங்கல் பகுதியில் நேற்றிறவு 9.30 மணியளவில் மேற்கொண்ட சுற்றிவலைப்பில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர் 65 வயதுடையவர் என்றும் மேலதிக விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபரையும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.விஜேசிங்க தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .