2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சா வைத்திருந்த இருவர்க்கு அபராதம் ; ஒருவருக்கு சிறை

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உப்புவெளிப் பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவருக்கு, தலா 5000  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது 

 

இதே குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட மற்றுமொரு நபருக்கு, விதிக்கப்பட்ட 5000 ரூபா அபராதத்தை செலுத்த முடியாமையினால், அவருக்கு இரண்டு மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்த மூன்று நபர்களையும் உப்புவெளிப் பொலிஸார் கைது செய்து, நேற்று (3) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது, நீதவான் ஹம்ஸா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X