2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கேரளா கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை ,சிறாஜ் நகர் சந்தியில் கேரளா கஞ்சா வைத்திருந்த இரு சந்தேகநபர்களை, தம்பலகாமம் பொலிஸார் இன்று  (24) காலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு நபர்களிடமிருந்து 2 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில், கிண்ணியா  மற்றும் வாணாறு பகுதிகளைச் சேர்ந்தர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ​ர்கள் பணப்பையில் கேரளா கஞ்சாவினை மறைத்து  பயணிகளைப் போல் நடமாடித் திரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில்  தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X