ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஒக்டோபர் 06 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணேஸபுரியிலுள்ள வீட்டில், 10 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவரை திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார், இன்று (06) காலை கைது செய்துள்ளனர்.
திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் குழுவினர் இன்று காலை 10.00 மணியளவில், மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர், 67 வயதுடையவர் என்றும் மேலதிக விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரையும் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .