Editorial / 2017 ஒக்டோபர் 07 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, கிண்ணியா பகுதியில், கேரளா கஞ்சாவுடன் காணப்பட்ட இரண்டு சந்தேகநபர்களை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று (06) இரவு, கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில்,கிண்ணியா, கூபா நகர் பகுதியில் 03 கிராம் கேரளா கஞ்சாவுடன் 25 வயதான நபரொருவரும், கிண்ணியா வாராந்த பொதுச் சந்தைப் பகுதியில் 05 கிராம் கேராளா கஞ்சாவுடன் 40 வயது நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவருடன், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவினையும் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஸன் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில், கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago