2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கைதிகளின் பங்களிப்புடன் சிரமதானம்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 06 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

திருகோணமலை புனித மரியாள் கல்லூரியிலும், திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்திலும் திருகோணமலை சிறைச்சாலைக் கைதிகளின் பங்களிப்புடன் சனிக்கிழமை சிரமதான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜீவ ஸ்ரீமால் சில்வா தெரிவித்தார்.   

நாடு பூராகவும் டெங்கொழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில்,  கைதிகளின் பங்களிப்புடன் சிரமதானத்தை முன்னெடுக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சுற்றுநிரூபத்துக்கு அமைய, கைதிகளின் பங்களிப்புடன் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்டினமும்சூழலும் பிரதேச செயலகத்திலும்; மாவட்டச் செயலகத்திலும் செவ்வாய்க்கிழமை (4) சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X