2025 மே 19, திங்கட்கிழமை

கைவிடப்பட்ட நிலையில் யானைக் குட்டி மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - சேருவில பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று (28) மாலை கண்டுபிடிக்கப்பட்ட யானைக் குட்டியொன்று, வனஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனிமையில் இருந்த இந்த யானைக்குட்டியை, காட்டுக்கு  விறகு எடுக்கச் சென்ற பொதுமக்கள் சிலர் கண்டுபிடித்து, வனஜீவராசி அதிகாரிகளுக்குத் ​தகவல் தெரியப்படுத்தியுள்ளனர்

இந்த யானைக் குட்டி பிறந்து சுமார் இரண்டே கிழமையான நிலையிலே, தாய் யானையால் கைவிடப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பிராந்திய அலுவலகத்தினூடாக யால தேசிய சரணாலயத்தில் யானைக் குட்டியை விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X