2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கொரோனா பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர்,  திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் எடுக்கப்பட வேண்டிய, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான   கலந்துரையாடல், பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில், பிரதேச செயலகத்தில், இன்று (20) நடைபெற்றது.

பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் பொறுப்பதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றலுடன் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 

அத்தியவசியமற்ற முறையில் பொதுமக்கள்,  ஊழியர்கள் ஒன்று கூடுதலைத் தவிர்ப்பதற்கும் ஏனைய பிரதேசங்களிலிருந்து வருபவர்கள் தொடர்பாக தவகல்களை பெற்றுக்கொள்ளும் பொறிமுறை தொடர்பாகவும், அதிக ஊழியர்களைக் கொண்ட ஆடைத்தொழிற்சாலை உட்பட ஏனைய தனியார் நிறுவனங்கள், அரச அலுவலகங்களின் தொழிற்பாடு தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .